Monday, April 9, 2007

கொடுக்காதே பணம் கொடுக்காதே

சும்மாவா நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் , பணம் கடன் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம் என்று. கடன் வாங்க செய்தாலும் கடன் மட்டும் கொடுத்து விடாதிர்கள். கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்கறதை விட, கடன் கொடுத்து விட்டு திருப்பி வாங்கவது தான் ரொம்ப கஷ்டம். இதில் பொல்லாப்பு வேற. சரி நேரா பாய்ண்டுக்கே வருவோம். அப்படி மீறி பணம் கொடுக்க நேர்ந்தால் இந்த இரண்டுக்கு மட்டுமே கொடுங்க, ஒருத்தரோட மருத்துவ செலவுக்கும் மற்றும் கல்வி செலவுக்குமே மட்டும் கொடுங்கள். எக்காரணதுக்கும் மற்ற விசயங்களுக்கு கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தால் அது உங்களுக்கு மனக் கஷ்டத்தை தான் தரும். என்னடா இது காலையல "இன்றைய ராசி பலன்" கேட்கிற மாதிரி இருக்கு என்று எண்ண வேண்டாம். பணத்தை கொடுத்து விட்டு, வாங்கும் போது "பைத்தியகாரன்", "ஆணவகாரன்", "ஊர்ல இல்லாத பணம் கொடுத்து விட்டான்" என்று எல்லம் கேட்கும் போது "சொந்த" உறவும் வேண்டாம் "தூரத்து" உறவும் வேண்டாம் என்றே தோன்றுகிறது. மனசு வேணும், பணம் வந்தாலும் போனாலும்,கஷ்டபடாத மனசு வேண்டும். எதை கொண்டு வந்தோம் எடுத்து செல்ல என்று. எதுவாக இருந்தாலும் , "இருந்தா" இல்லாதவர்க்கு கொடுப்பதே மனசு "இருப்பவனை" காட்டுகிறது.